‘விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளோடு நிற்கும்’ திருமாவளவன் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகளோடு நிற்கும் என்று காரல்மார்க்சின் 200-வது பிறந்தநாள் விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார்.
கடலூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாள் விழா கருத்தரங்கு கடலூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கம்யூனிஸ்டுகள் காரல்மார்க்சின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், தலித் இயக்கங்கள் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும், திராவிட இயக்கங்கள் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். காரல்மார்க்ஸ் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கு மட்டும் உரியவர் அல்ல, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் உரியவர். இன்றைக்கும் முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாக காரல் மார்க்ஸ் இருக்கிறார்.
இந்தியாவில் முதலாளித்துவம் சாதியின் பெயரால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. சாதியின் பெயரால் தான் உற்பத்தியும், தொழிலும் கட்டமைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் முதலாளி, தொழிலாளி என்ற கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆண்டான், அடிமை என்ற உறவுமுறையைத்தவிர வேறு எந்த முறையும் கிடையாது. இங்கே தலித்துகள் விவசாய கூலி தொழிலாளிகளாகவும், உதிரி தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள். எனவே அம்பேத்காரியக்கமே இந்த மண்ணின் மார்க்சியம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த மண்ணை ஆளும் நிலை வந்தால், யாராவது அரசியல் சாசன சட்டத்தில் கைவைக்க முடியுமா?. முடியாது. டெல்லியில் சீத்தாராம் யெச்சூரியை நான் சந்தித்த போது, தி.மு.க.வுக்கு ‘செக்’ வைப்பதற்காக திருமாவள வளன் யெச்சூரியை சந்தித்ததாக சொன்னார்கள். அரசியல் கணக்கு நமக்கு தேவையில்லை. சாதி ஒழிப்புக்காகவே இடதுசாரிகளோடு சேர்ந்து போராடுகிறோம். இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகளோடு நிற்கிறார்களோ இல்லையோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரிகளோடு நிற்கும்.
இவ்வாறு தொல்.திருமா வளவன் பேசினார். முன்னதாக அவர் நெய்வேலியைச்சேர்ந்த அபினேசுக்கும்(வயது21), கோவையை சேர்ந்த பிரித்திகாவுக்கும்(19) சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.
கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது.
இன்றைக்கு இந்தியாவில் மதவாத பாரதீய ஜனதா கூட்டத்துக்கு சாவுமணி அடிக்க வேண்டிய மிகப்பெரிய தேவை இருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி, இந்தியாவின் பண்பாட்டை, மொழியை, கலாச்சாரத்தை சீரழிக்கிறது. இந்த மதவாத இயக்கத்துக்கு சாவு மணி அடிப்பதற்காக முடிந்தவரை எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மதவெறி சக்திகளை அப்புறப்படுத்துவதில் திருமாவளவனின் பங்கு மகத்தானது. பாரதீய ஜனதா கட்சி முறியடிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சமூக மாற்றத்தையும் உருவாக வேண்டும். சமூக மாற்றத்துக்கு அம்பேத்காரியக்கமும், பெரியாரியக்கமும், கம்யூனிசமும் சேர்ந்து போராட வேண்டிய தேவை இருக்கிறது. நீலமும், சிவப்பும் இணைந்தால் தான் சமூக மாற்றத்துக்கு வழி கோல முடியும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய உறுப்பினர் சுப்புராயன், தமிழ்தேசிய இயக்கம் தியாகு, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வக்கீல் திருமார்பன், மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர்கள் அறவாழி, கதிர்வாணன், தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, பண்ருட்டி தொகுதி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர் புரட்சியாளன், ஒன்றிய துணைச்செயலாளர் எழில் வளவன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ஆதிகுடியரசு, இளம்பிறை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் குளோப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story