தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர்களுடனான சமாதான கூட்டம் நடந்தது. இதில் போராட்டம் அமைதியான முறையில் இருக்கலாம். போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். வேறு சிலர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருப்பது பற்றி தெரியவில்லை. அதே நேரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. 100 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆலையை இயக்குவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனை எதிர்த்து ஆலை தரப்பினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனம் அந்த பகுதியில் ரோடுகளை பயன்படுத்த சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். ஓடைகள் வழியாக வாகனங்களை இயக்குவதற்கும் அனுமதி பெற வேண்டும். மேலும் அந்த நிறுவனம் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும். அதன்மூலம் சாலைகள் சீரமைக்கப்படும். அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2016-2017-ம் ஆண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கரிசல்குளம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபால், திருமங்கலகுறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் நினைவு பரிசுகளையும், பட்டதாரி ஆசிரியர்கள் 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் வெங்கடேஷ் வழங்கி பாராட்டினார். இதேபோன்று 2017-18-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 21 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இருந்து படித்து மாணவ-மாணவிகள் சிறப்பான தேர்ச்சி பெற்றனர். அந்த விடுதிகளுக்கான நினைவுப்பரிசை அந்தந்த விடுதிகளின் காப்பாளர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதுா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) உமாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story