ஐ.டி. நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாபம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சாவு


ஐ.டி. நிறுவன ஊழியருக்கு ஏற்பட்ட பரிதாபம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சாவு
x
தினத்தந்தி 21 May 2018 11:00 PM (Updated: 21 May 2018 10:12 PM)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் சென்ற ஐ.டி. நிறுவன ஊழியர், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடினார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். அவர் நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் நீண்ட நேரம் போராடியதும், அவருக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வராத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பறக்கை காந்திநகரை சேர்ந்தவர் ராஜம். இவர், நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாள ராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் முத்து சரவணன் (வயது 26), என்ஜினீயரான இவர் வடசேரியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் வேலை முடிந்ததும், முத்து சரவணன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

இருளப்பபுரம்- வெள்ளாடிச்சிவிளை சாலையில் புத்தன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே சென்ற போது முன்னால் சென்ற ஒரு அரசு பஸ்சை அவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், முத்து சரவணன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரும் பக்கவாட்டில் மோதிக் கொண்டன.

இதில் நிலைகுலைந்த முத்து சரவணன், ஸ்கூட்டருடன் அரசு பஸ்சின் பின்பக்க சக்கரத்துக்குள் விழுந்து சிக்கினார். இந்த விபத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டரின் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் முத்து சரவணனுக்கு வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்து சரவணன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்று வந்தவர்கள் கூடி நின்ற வேடிக்கை பார்த்தனர். வாகனங்களிலும் அந்த வழியாக பலர் சென்றனர். ஆனால், முத்துசரவணனுக்கு முதல் உதவி அளிக்கவோ, அல்லது அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவோ யாரும் முன்வரவில்லை. இப்படியே சுமார் அரை மணி நேரம் அவர் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னரே நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்து சரவணனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி முத்து சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முத்துசரவணனின் உறவினர் வேலப்பன் (48), நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக் டர்(பொறுப்பு) அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் ஸ்கூட்டரின் மீது மோதி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முத்து சரவணன், அரசு பஸ்சை முந்தி செல்ல முயலும் காட்சியும், அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பக்கவாட்டில் மோதிய காட்சியும் தெளிவாக பதிவாகியிருந்தது. பஸ் சக்கரத் துக்குள் விழுந்து சிக்கிய முத்து சரவணன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காட்சிகளும், அதை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததும் அந்த கண் காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மனிதாபிமானத்துடன், சரியான நேரத்தில் யாராவது முத்து சரவணனை சிகிச் சைக்கு கொண்டு சென்றிருந் தால் அவரை ஒருவேளை காப்பாற்றி இருக்க முடியும். முத்துசரவணன் உயிருக்கு போராடும் காட்சிகளையும், அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களையும் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட் டுள்ளனர். அந்த காட்சி தற்போது நாகர்கோவில் பகுதியில் வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சிகளை பார்த்தவர்கள், மனித நேயம் மக்களிடம் மாய்ந்து வருகிறது என்று வேதனையுடன் கூறியதை பார்க்க முடிந்தது. 

Next Story