நாகையில், 7 மாதங்களுக்கு முன்பு நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
நாகையில், 7 மாதங்களுக்கு முன்பு நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் பிரச்சினையில் தீர்த்து கட்டியது அம்பலமானது.
நாகூர்,
நாகையை அடுத்த நாகூர் அம்பேத்கர் நகர் பீரோடு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சிவா (வயது19). சிவா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி நாகூர் தங்கச்சிமடம் குளம் அருகே உள்ள சீமை கருவேல மரக்காட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கொலை செய்தது யார்? எதனால் கொலை செய்யப்பட்டார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொலை நடந்து 7 மாதங்கள் ஆன நிலையில் நாகூர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகூர் பீரோடும் தெருவை சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்சந்திரசெல்வம் (46) (மாற்றுத்திறனாளி), கோட்டைபட்டினம் புதுக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜா (22), நாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அஞ்சன் மகன் விஜய் (20), அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ரவிக்குமார் (20), ஆனந்த் மகன் பல்லுபிரகாஷ் என்கிற பிரகாஷ் (20) உள்பட 12 பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தமிழ்சந்திரசெல்வம், அவரது தம்பி தமிழ்ராஜன் ஆகியோரின் மனைவிகளிடம் சிவா கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் கேட்காததால் சிவாவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தமிழ்சந்திர செல்வத்தின் மனைவியிடமும், அவரது தம்பி தமிழ்ராஜன் மனைவியிடமும் சிவா கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த இருவரும் சிவாவை கண்டித்துள்ளனர். ஆனால் அதனை கேட்காமல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து தமிழ்சந்திரசெல்வமும், தமிழ்ராஜனும் தங்களது நண்பர்களான நாகராஜா, விஜய், ரவிக்குமார், பிரகாஷ் ஆகியோரிடம் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சிவாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி நாளான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி சிவாவை மது அருந்தலாம் என்று அழைத்து சென்றுள்ளனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்தபோது 6 பேரும் சேர்ந்து சிவாவை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சிவாவின் பிணத்தை கருவேல மரக்காட்டுக்குள் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ் சந்திரசெல்வம், நாகராஜா, விஜய், ரவிக்குமார், பிரகாஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தமிழ்ராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story