கண்டனூரில் திரவ சோப் தயாரிக்கும் தொழிற்கூடம் அமைச்சர் பாஸ்கரன் தகவல்
மாநிலத்தில் முதல் முறையாக காரைக்குடியை அடுத்த கண்டனூரில் திரவ சோப் தயாரிக்கும் தொழிற்கூடம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
கதர் மற்றும் கிராம தொழில் துறை சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நவீன மின்விசை எந்திரங்கள் வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.பி., கதர் மற்றும் கிராம தொழில் வாரிய முதன்மை செயல் அலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சக்கரத்துடன் கூடிய நவீன மின்விசை எந்திரத்தை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுவாக மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்களை உற்பத்தி செய்யும்போது சாதாரண மர அச்சு எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பொருட்கள் தயாரிக்க காலதாமதம் ஏற்படும். இதை சரிசெய்யும் வகையில் அரசு தற்போது ‘சைலாவீல்’ என்று அழைக்கப்படும் நவீன மின்விசை எந்திரத்தை வழங்கி வருகிறது. இந்த எந்திரத்தில் 50 கிலோ வரை மண்ணை வைத்து கொள்ளலாம். 8 மணி நேரம் எந்திரத்தை இயக்கினாலும் ஒரு யூனிட் மின்சாரம் தான் செலவாகும். இதை பயன்படுத்தி சிறிய அகல் விளக்கு முதல் பெரிய பானை வரை தயாரிக்கலாம்.
இந்த திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு 191 எந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை தலா ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தில் முதல் முறையாக காரைக்குடியை அடுத்த கண்டனூரில் கதர் மற்றும் கிராம தொழில் துறை மூலம் திரவ சோப் தயாரிக்கும் தொழிற்கூடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான எந்திரங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காரைக்குடியில் கதர் கிராப்ட் பட்டு எம்போரியத்தையும், மானாமதுரையில் ரூ.25¼ லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தொழிற்கூடத்தையும் அவர் திறந்துவைத்தார்.

Related Tags :
Next Story