படிப்பை எளிமையாக்கும் புதிய அப்ளிகேசன்கள்!
கணினி யுகத்தில் இது அப்ளிகேசன் காலம் என்றால் மிகையில்லை. ஸ்மார்ட்போன்களின் பெருக்கமும், தேவைகளின் சுருக்கமும் அப்ளிகேசன்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
கல்வித்துறையிலும் நாள்தோறும் புதிய அப்ளிகேசன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும், படிப்பை எளிமையாக்கும் சில புதுமையான அப்ளிகேசன்களை அறிவோம்....
டாப்ரேங்கர்ஸ் (TopRankers): வங்கிப் பணிகளுக்கான தேர்வு, சட்டத் தேர்வு, எஸ்எஸ்சி, யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக எண்ணற்ற அப்ளிகேசன்கள் வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது இந்த அப்ளிகேசன். வகுப்புகளிலும், புத்தகங்களில் இருந்தும் எளிமையாக குறிப்பு எடுக்க உதவுகிறது இந்த அப்ளிகேசன்.
பைஜூஸ் (BYJU’S) : இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்களில் ஒன்று பைஜூஸ். கேட், ஜிமாட், ஜே.இ.இ., ஐ.ஏ.எஸ்., ஜி.ஆர்.இ., போன்ற தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கான பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது. மேலும் மாணவர்களின் தேவை மற்றும் வேண்டுகோளுக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் வசதிகளை சேர்த்துக் கொண்டே வருவது இந்த அப்ளிகேசனின் சிறப்பு. மேலும் இதில் வழங்கப்படும் தகவல்களும், காட்சிகளும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இகுயிக்கர்ஸ் (EQuickes) என்ற அப்ளிகேசன்களிலும் இத்தகைய போட்டித் தேர்வுக்கான பாடக்குறிப்புகள் உள்ளன. இவை ஆன்லைனில் இந்த தேர்வுகளுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.
சிம்பிளிலேர்ன் (Simplilearn) : இந்த அப்ளிகேசன்களும் அதிகமான மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. படிப்புக்காக மட்டும் அல்லாமல் தொழில்துறை, வாழ்க்கைப் பாதை, தொழில்நுட்பம், வணிகம் போன்ற பலதுறை தகவல்களையும் எளிமையாக திரட்டித் தரவும், பல்வேறு டிப்ஸ்களையும் தருகிறது. எனவே மாணவர் உலகத்தைத் தாண்டி தொழில்நிறுவனங்கள், பணியாளர்கள், வேலைதேடுனர்கள், ஆய்வுத்திட்டங்கள், செயல்திட்டங்களில் ஈடுபடும் குழுவினர் போன்றவர்களும் இந்த அப்ளிகேசன்களை விரும்பி பயன்படுத்தலாம்.
புரோஷோ (Prozo) : இந்த அப்ளிகேசனும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்களின் உறைவிடமாகவும், டிஜிட்டல் குறிப்புகளின் மையமாகவும் விளங்குகிறது இந்த அப்ளிகேசன். 400க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாருடன் ஒருங்கிணைந்து இந்த அப்ளிகேசன் வழங்கப்படுவதால், பாடப்புத்தகங்கள் பற்றிய தேடல்களை எளிமையாக்கி, ஒரே நாளில் உங்கள் கைகளில் மெட்டீரியல்களை பெற்றுத் தர துணைபுரிகிறது இந்த அப்ளிகேசன்.
பாஸ்ட்டூடண்ட்ஸ் (Fastudents) : முழுமையான கல்வி அப்ளிகேசன் என்ற சிறப்பு பெற்றதுடன், அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கல்வித்துறை அப்ளிகேசன் இது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறை பணியில் உள்ளது. புத்தகங்கள் மட்டுமல்லாது ஸ்டேசனரி வகைகள், கல்வி உபகரணங்கள், போட்டித் தேர்வு தகவல்கள், கல்லூரி பாடப்புத்தகங்கள், பயிற்சித் திட்டங்களுக்கான விவரங்கள் உள்ளிட்ட முழுமையான கல்வித் தேவைகளை நிறைவேற்றுகிறது இந்த அப்ளிகேசன்.
என்செர்ட் சொல்யூசன் (NCERT Solution) : மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. மாணவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அப்ளிகேசன் இது. விளம்பரங்கள் ஏதும் இந்த அப்ளிகேசனில் தோன்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புரிதல் திறனை எளிமையாக விளக்குவதற்காக பல்வேறு யுத்திகள் கையாளப்பட்ட விளக்கங்கள் இந்த அப்ளிகேசனில் கிடைப்பது சிறப்பு.
ஜி.கே. பார்ஆல் (GK for All) : புகழ்பெற்ற அப்ளிகேசன்களில் குறிப்பிடத்தக்கது இது. நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுக்குமான தொகுப்புகள் நிரம்பி வழிகிறது. தினசரி நிகழ்வுகளும் உடனே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தொகுப்பாகவும் கிடைக்கின்றன.
டிக்ஸ்னரி ஆப்லைன் : மாணவர்களுக்கு அவ்வப்போது வரும் சொற்பொருள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக இணைய வசதி இல்லாமலேயே அகராதி சொற்களஞ்சியமாக செயல்படுகிறது English to Hindi Dictionary offline அப்ளிகேசன். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் சொற்களுக்குப் பொருள் அறியவும், சொற்றொடர்களை மொழி பெயர்த்து அறியவும் இந்த அப்ளிகேசன் உதவியாக உள்ளது. இதேபோல வார்த்தை வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக வொக்கபுலரி என்ற அப்ளிகேசனும் இணையத்தில் கிடைக்கிறது.
இந்த அப்ளிகேசனில் பல தங்கள் சேவைக்கேற்ப கட்டணம் விதிக்கின்றன. சிலவற்றை சிறிது காலத்திற்கு இலவசமாக பயன்படுத்த முடியும். மாணவர்கள் தங்கள் தேவைக்கேற்ற அப்ளிகேசனை பயன்படுத்தி அறிவையும், வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளலாம்.

Related Tags :
Next Story