டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை சுவரில் துளைபோட்டு மர்ம நபர்கள் கைவரிசை
குமாரபுரம் அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளைபோட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குமாரபுரம்,
தக்கலையை அடுத்த குமாரபுரம் அருகே சித்திரங்கோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு கடையின் பின்பகுதியில் பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம் போல், பார் மற்றும் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலையில் கடையின் மேற்பார்வையாளர் ரமேஷ், பாரை திறக்க சென்றார். அப்போது பார் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, பாரை ஒட்டியிருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போடப்பட்டிருந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை திறந்து பார்த்த போது உள்ளே மது பாட்டில்கள் உடைந்து கிடந்தன. மேலும், விலை உயர்ந்த ஏராளமான மது பாட்டில்களை காணவில்லை.
இரவில் மர்ம நபர்கள் பார் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே புகுந்த அவர்கள் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுவரை துளையிட்டபோது, சுவரையொட்டி அடுக்கி வைத்திருந்த பல மது பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன.
இதுகுறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story