கோவை மாவட்டத்தில் குளங்கள், ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
குளங்கள், ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.
கோவை
கோவை ஒருங்கிணைந்த மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி தலைமையில் நிர்வாகிகள் நித்தியானந்தம், குழந்தைவேலு, பிரிமியர் செல்வம் ஆகியோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் ஹரிகரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாய மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சிகளின் கழிவுகள். மருத்துவ கழிவுகள் ஆகியவை குளங்கள், ஆறுகளில் கலக்கப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க பல்வேறு தரப்பினர் பல முயற்சிகள் எடுத்தும் இன்னும் தீரவில்லை. இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
இதன்பிறகும் அனைத்து தொழிற்சாலைகளும், நகராட்சிகளும் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய் யாமல் விட்டால் கோவை மாவட்டம் வாழ தகுதியில்லாத மாவட்டமாக மாறி விடும். கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்காத தொழிற்சாலைகள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் மாசு காரணமாக கோவை வாழத் தகுதியற்ற மாவட்டமாக மாறி விடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவமனை, தொழிற்சாலை கழிவுகள் சமூக விரோதிகளால் எரிக்கப்படு கிறது. இதனால் காற்று மாசுபடுகிறது. கோவை ஸ்மார்ட் நகரமாக அறிவிக்கப்பட்டதும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே குளங்கள் மற்றும் ஆறுகள் மாசுபடுவதை மாவட்ட கலெக்டர் உடனடியாக தடுக்க வேண்டும்.
அப்போது நிர்வாகிகள் வைரவேல், பிரேம், தனபால், ராஜேந்திரன், பெரியசாமி, கருப்பசாமி, மோகன்குமார், வடிவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story