சென்னையில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
சென்னையில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மாடம்பாக்கம், வள்ளலார் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம், கூடுவாஞ்சேரி-பொத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற தாம்பரம் ரெயில்வே போலீசார், பார்த்திபன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகில், பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பெண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் காவி நிறத்தில் பூ போட்ட சேலை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ரெயிலில் அடிப்பட்டு இறந்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.'

Related Tags :
Next Story