பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா: திருச்சி மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்


பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா: திருச்சி மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 23 May 2018 3:45 AM IST (Updated: 23 May 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதையொட்டி ஒத்தக்கடை வழியாக செல்லும் பஸ்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஒத்தக்கடை வழியாக சென்னை, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை செல்லும் புறநகர் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் சிலை, கலையரங்கம் தியேட்டர் சாலை, ஆர்.சி.பள்ளி சாலை சந்திப்பு, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

சென்னை, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், அரிஸ்டோ, கோரிமேடு, மிளகுபாறை வழியாக வர வேண்டும். கரூர் மார்க்கத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் கே.டி. ஜங்ஷன், சாஸ்திரி சாலை, அண்ணாநகர் புதிய சாலை, எம்.ஜி.ஆர்.சிலை, நீதிமன்ற சாலை, வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, சங்கம் ஓட்டல், மிளகுபாறை வழியாக வர வேண்டும்.

மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாநகர் புதிய சாலை, சாஸ்திரி சாலை, கே.டி. ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அமெரிக்கன் மருத்துவமனை வழியாக சத்திரம் பஸ் நிலையம் செல்லும் டவுன் பஸ்கள் வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, அய்யப்பன் கோவில் சாலை, எம்.ஜி.ஆர். சிலை வழியாக செல்ல வேண்டும்.

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் டவுன் பஸ்கள் எம்.ஜி.ஆர். சிலை, நீதிமன்ற சாலை, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சந்திப்பு, வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, மிளகுபாறை வழியாக வரவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Next Story