தஞ்சையில் தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி தொடங்கியது 300 பேர் பங்கேற்பு


தஞ்சையில் தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி தொடங்கியது 300 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நேற்று தொடங்கிய தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு-மீட்புப்பணித்துறை சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டிகளை திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை துணை இயக்குனர் இளங்கோ தொடங்கி வைத்தார். தொடக்கவிழாவில் மாவட்ட அலுவலர்கள் இளஞ்செழியன், ராமமூர்த்தி, கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 300 பேர் பங்கேற்றனர். காலையில் ஏணி ஏறுதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகளும், தீ விபத்து, கட்டிடங்கள் இடிந்து விபத்து போன்றவை நடந்தால் தீயணைப்பு வீரர்கள் எப்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து செயல்விளக்கமும் நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

மாலையில் கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இன்றும்(புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,800 மீட்டர் ஓட்டப்பந்தயமும், இறகு பந்து, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீச்சல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.பரிசளிப்பு விழா நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகிறார். 

Next Story