தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் பஸ் கவிழ்ந்தது 12 பயணிகள் படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் பஸ் கவிழ்ந்ததில் 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இருந்து தனியார் பஸ் ஒன்று ஜவளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை தேன்கனிக்கோட்டை தாலுகா சொள்ளேபுரம் கிராமம் அருகில் ஏரிக்கரையில் வந்தபோது எதிரே ஒரு சரக்கு வேன் வந்தது. பஸ் டிரைவர் சரக்கு வேனுக்கு வழி விடுவதற்காக பஸ்சை ஓரமாக ஓட்டினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். அதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் சொள்ளேபுரம், தளி, ஜவளகிரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ், மற்றும் இருசக்கர வாகனங்களில் ஏற்றி சிகிச்சைக்காக தளி அரசு மருத்துவமனைக்கும், பலத்த காயம் அடைந்த சிலரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
தளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story