நெல்லை அருகே சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்த கல்லூரி பஸ் டிரைவர் கைது போக்சோ சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி பஸ் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி பஸ் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆபாசம்நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மேல பிள்ளையார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 57). இவர் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகில் அந்த பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் விளையாடினர். பின்னர், அவர்களுடைய பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், 2 சிறுமிகளும் தனியாக இருந்தனர். இதை அறிந்த அவர், அந்த சிறுமிகளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார். திடீரென சிறுமிகளின் முன்பு தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் வீட்டிற்குள் இருந்து பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பெற்றோர் வேலை செய்யும் இடத்துக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் இசக்கி பாண்டி வீட்டுக்கு சென்று கண்டித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்களுக்கு இசக்கி பாண்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கைதுஇதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இசக்கி பாண்டியை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.