நெல்லையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நெல்லையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
நெல்லை,
நெல்லையில் கிராம அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
வேலை நிறுத்தம்அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்ட குழு சார்பில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அகில இந்திய அளவில் கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 3 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். காப்பீடு தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் மற்றும் இதுபோன்ற பரிந்துரைகளை அமல்படுத்தாமல் 18 மாதங்களாக இழுத்தடிக்கும் மத்திய அரசு மற்றும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து இந்த காலவரையற்ற போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று கிராம அஞ்சல் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அழகுமுத்து, சீனிவாச சொக்கலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க செயலாளர் ஜோக்கப்ராஜ், கோட்ட செயலாளர் ஞானபாலசிங், பாட்ஷா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் நிர்வாகிகள் பெரியதுரை, மாரிமுத்து, சுபாஷ், நம்பி, செல்வம், சாக்கரடீஸ், புஷ்பாகரன், முருகேசன், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் தபால் பட்டுவாடா மற்றும் கிராமப்புற தபால் நிலையங்கள் மூலம் செய்யப்படும் பணிகள் பாதிக்கப்பட்டன.