சிறை அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு

சிறை அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் அலிபாக் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 May 2018 4:01 AM IST (Updated: 23 May 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

சிறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அலிபாக் மோக்கா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

சிறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து அலிபாக் மோக்கா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறை அதிகாரியை கொல்ல முயற்சி

நவிமும்பை தலோஜா சிறையில் உதவி ஜெயிலராக இருந்து வருபவர் பாஸ்கர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

பாஸ்கரை சுட்டுக்கொல்ல முயன்றதாக போலீசார் பிரஜோத் பாட்டீல், சங்கராம் கபோடே ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

விசாரணையில், முன்விரோதத்தில் அவர்கள் பாஸ்கரை கொல்ல முயன்றது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதான இந்த வழக்கு அலிபாக் மோக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி அவர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story