கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்
கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மும்பை,
கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வாலிபர் சுட்டுக்கொலைநவிமும்பை பன்வெல்- மாதேரான் டேரங்க் அணை பகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாக மீட்கபட்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், பிணமாக மீட்கப்பட்டவர் புனே எரவாடா பகுதியை சேர்ந்த ஓம்குமார் குந்தன்(வயது21) என்பது தெரியவந்தது. அவரது மனைவி சுதா கணவரை காணவில்லை என எரவாடா போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில், ஓம்குமார் குந்தனின் கொலையில் சுதாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது சகோதரர் போலீசில் கூறினார். இதற்கிடையே சுதாவும் திடீரென தலைமறைவாகி விட்டார்.
கள்ளத்தொடர்புஇது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பன்வெலை சேர்ந்த மராத்தி மற்றும் போஜ்புரி படதயாரிப்பாளர் நகுஸ்குமார் கோலி (37) என்பவர் தனது மெய்காவலர் தரம்பிர் சிங் (24) என்பவருடன் சேர்ந்து ஓம்குமார் குந்தனை கொலை செய்திருந்தது தெரியவந்தது.
இதற்காக அவரது இன்னொரு மெய்க்காவலர் நரேந்திர பாரிக்கர்(54) என்பவர் துப்பாக்கி கொடுத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-
படத்தயாரிப்பாளர் நகுஸ்குமார் கோலி சுதாவின் உறவினர் ஆவார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இது ஓம்குமார் குந்தனுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை கண்டித்தார்.
இந்தநிலையில், பிரச்சினை பற்றி பேசுவதற்காக கணவர், மனைவி இருவரும் நவிமும்பை உல்வேயில் உள்ள நகுஸ்குமார் கோலியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
மனைவிக்கு வலைவீச்சுஅப்போது, நகுஸ்குமார் கோலி மெய்காவலர் தரம்பிர் சிங்குடன் ஓம்குமார் குந்தனை காரில் வெளியில் அழைத்து சென்று உள்ளார். பின்னர் காரில் வைத்து துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்துவிட்டு, உடலை டேரங்க் அணை பகுதியில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான சுதாவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.