தாழ்வாக செல்லும் மின்கம்பி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


தாழ்வாக செல்லும் மின்கம்பி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2018 4:34 AM IST (Updated: 23 May 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

வட்டம்பாக்கம் கிராமத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாழ்வாக மின்கம்பி செல்கிறது. அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வட்டம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இந்த மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின்கம்பிகள் மிகவும் ஆபத்தான நிலையில் கையால் தொடும் அளவுக்கு தாழ்வாக தொங்கியபடி செல்கிறது.

இதனால் குடியிருக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும்போதும் மீண்டும் உள்ளே செல்லும் போதும் மரண பயத்தில் செல்ல வேண்டி உள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மிகுந்த பயத்துடன் காணப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் செல்லும் இந்த சாலை ஒரகடம், படப்பை, வளையக்கரணை, நாட்டரசன்பட்டு போன்ற ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் எப்போது வயர் அருந்து விழுமோ என்ற பயத்துடன் செல்லவேண்டிய நிலையில் உள்ளது. ஆகவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும்.

ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story