அஞ்சல் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் 160 தபால் அலுவலகங்கள் இயங்கவில்லை.
விருதுநகர்
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மத்திய அரசின் கமலேஷ் சந்திரா கமிட்டியின் சிபாரிசுகளை உடனடியாக அமல் படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக நிறைவேற்றக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
180 பெண்கள் உள்பட 490 கிராமிய அஞ்சல் ஊழியர்களில் 160 பெண்கள் உள்பட 430 கிராமிய அஞ்சல் ஊழியர்களும், 110 பெண்கள் உள்பட 335 அஞ்சல் ஊழியர்களில் 80 பெண்கள் உள்பட 220 அஞ்சல் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் 160 தபால் அலுவலகங்கள் செயல் படவில்லை. ஏற்கனவே கடந்த 19-ந்தேதி முதல் தபால் சேவைக்கான மென்பொருள் மாற்றத்தால் தபால் அலுவலக பணிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அஞ்சல் அலுவலகம் முன்பு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், மூன்றாம் பிரிவு, தபால்காரர், பன்திறன் ஊழியர், கிராம அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம அஞ்சல் ஊழியர் சங்க கிளை தலைவர் ராகவன் தலைமை தாங்கினார்.
Related Tags :
Next Story