நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள், தனியார் நிலங்களில் சாயப்பட்டறை கழிவுகள், தொழிற்சாலை ரசாயன கழிவுகளை கொட்டும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் டி.வினய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார், அரசு புறம்போக்கு நிலம், சாலையோரங்கள், நீர்நிலைகளில் இரவு நேரத்தில் தொழிற்சாலை திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இந்த அபாயகரமான கழிவுகளை கொட்டுவதால் மண் வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக் கும் சுகாதாரக்கேட்டை விளை விக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் ஏற்கனவே சட்டத்துக்கு புறம்பாக தொழிற்சாலை கழிவுகளை கொட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கழிவுகளை அனுப்பிய தொழிற்சாலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் சாலையோரங்களில் திடக்கழிவுகள் கொட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். எனவே, இதுபோன்று கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள், தொழிற்சாலை உரிமையாளர், நிலத்தை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், உடந்தையாக இருக் கும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருக்கிறார்.
Related Tags :
Next Story