‘ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் ஆட்சியை விட்டு ஓட வேண்டும்’ டி.ராஜேந்தர் ஆவேசம்


‘ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் ஆட்சியை விட்டு ஓட வேண்டும்’ டி.ராஜேந்தர் ஆவேசம்
x
தினத்தந்தி 23 May 2018 9:15 PM GMT (Updated: 23 May 2018 7:14 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் ஆட்சியை விட்டு ஓட வேண்டும் என்று டி.ராஜேந்தர் ஆவேசமாக கூறினார்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் ஆட்சியை விட்டு ஓட வேண்டும் என்று டி.ராஜேந்தர் ஆவேசமாக கூறினார்.

டி.ராஜேந்தர் ஆறுதல்

தூத்துக்குடியில் நடந்த போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று காலையில் லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாவது:–

துப்பாக்கி சூடு எதற்கு?

இங்கு நான் கட்சி தலைவராக வரவில்லை. சாதாரண மனிதனாக வந்துள்ளேன். தூத்துக்குடியில் 100 நாட்களாக நடந்த அறவழி போராட்டம் தமிழர்களின் தன்மான உணர்ச்சி போராட்டம். இதற்கு இந்த அ.தி.மு.க. அரசால் ஒரு வழி காண முடியவில்லை. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இறந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் அறிவித்து உள்ளது. இது அவர்கள் உயிருக்கு ஈடாகாது. அவர்கள் மீது எதற்காக துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்? அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு ஓட வேண்டும்.

பொம்மை ஆட்சி

வெள்ளக்காரன் ஆட்சியில் கூட இதுபோன்று நடந்தது இல்லை. இந்த ஆட்சியில் எதற்காக துப்பாக்கி சூடு? முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் தமிழகத்தில் அமைதி இல்லை. இந்த ஆட்சி டெல்லி ஆட்டிவைத்தால் ஆடுகிற பொம்மை ஆட்சியாக உள்ளது. இதற்கு பின்னர் தமிழகத்தில் இந்த ஆட்சி நடக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story