தபால்துறை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்
பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் தபால்துறை ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்,
இந்தியா முழுவதும் தபால் துறையில் கிராமிய தபால் ஊழியர்களாக பணிபுரியும் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் 22-ந்தேதி முதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமிய தபால் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும்போது கிடைக்கும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழுவில் கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 130 கிராம தபால் அலுவலகங்களை சேர்ந்த 250 தபால் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தபால், தபால் சேகரிப்பு, உள்நாடு, வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணபட்டு வாடா சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் தலைமை தபால் அலுவலர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (என்.எப்.பி.இ.) மாநில பொருளாளர் விஷ்ணுதேவன், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ரவீந்திரன், செயலாளர் வீரமணி, பொருளாளர் செந்தில்ராஜா, அஞ்சல்-3 தொழிற்சங்கத்தின் கோட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் சசிகுமார், பாரதிய யூனியன் சார்பில் துரைசாமி மற்றும் பல தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். இதில் திரளான தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் 2-வது நாளாக நேற்று ஜெயங்கொண்டம் தலைமை அலுவலகம் முன்பு தபால் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் கிராமிய அஞ்சலக ஊழியர் சங்க உபகோட்ட செயலாளர் கல்யாணம் தலைமை தாங்கினார். கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தேசிய கூட்டமைப்பு தொழிலாளர் சங்கம் பரமசிவம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் சங்கர், சீனிவாசன், நாராயணன் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் உபகோட்டத்திற்குட்பட்ட 90 அஞ்சலக பணியாளர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரவர்மன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story