கூட்டு குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் திருட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை
அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் திருட்டை அதிகாரிகள் கண்டுப்பிடித்து இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.
மீஞ்சூர்
மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், நாலூர், கொண்டகரை, வல்லூர், மேலூர் உள்ளிட்ட 36 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் அதிகாரிகள் தினந்தோறும் குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி கும்மிடிப்பூண்டி குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் அமலதீபன், பொன்னேரி தாசில்தார் சுமதி, உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, மின் பணியாளர் மனோகரன் ஆகியோர் குடிநீர் செல்லும் குழாய் களை ஆய்வு செய்தனர்.
அப்போது மீஞ்சூரை அடுத்த பத்மாவதி நகர் அருகே தனியார் ஒருவர் அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சட்ட விரோத இணைப்பு கொடுத்து வீட்டுக்கு தண்ணீர் பெற்று வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story