காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை
குளித்தலையில் காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்த புஷ்பகலாவும்(வயது 21), குளித்தலை அருகேயுள்ள நங்கவரம் பகுதியைச் சேர்ந்த சங்கர்பாபுவும் (22) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குளித்தலை வந்த அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஊர் முக்கியஸ்தர்கள் அழைத்து பேசி காதலர்களை நங்கவரத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை, அவரது உடல்நிலை சரியானதும் தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிய சங்கர்பாபு, புஷ்பகலாவை குளித்தலையில் உள்ள அவரது வீட்டில் விட்டு சென்றார்.
விஷம் குடித்து தற்கொலை
அதன்பின்னர் சங்கர்பாபுவை, புஷ்பகலா செல்போனில் தொடர்புகொண்டு பேச நினைத்தபோது தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் மனமுடைந்த புஷ்பகலா கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்த எலிமருந்தை(விஷம்) தின்று விட்டு மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அவரது தாயார் பார்வதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்பகலா உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புஷ்பகலாவுக்கு திருமணமாகி சில நாட்களே ஆனதால் திருச்சி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story