தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீடாமங்கலம்,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜாமாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சியின் நகர செயலாளர் ஜோசப், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கைலாசம், நாகூரான், கந்தசாமி, பூசாந்திரம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 25 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் தஞ்சை-திருவாரூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோட்டூர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கராசு, கல்யாணசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story