மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம் மற்றும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. இளைஞர் மன்றம், மாணவர் மன்றம், மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து, தமிழக மக்கள் மேடை அமைப்புகள் என்ற பெயரில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பீட்டர் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, நிர்வாகி சேதுமாதவன், சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மாதையன், திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் வனவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 10-க்கும் மேற்பட்டோரை கொன்ற போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே போல் சூளகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அன்வர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story