தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 4:30 AM IST (Updated: 24 May 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேப்பனப்பள்ளி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் உச்சிமாகாளி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் முருகன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே போல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நஞ்சப்பா, வட்ட செயலர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லகுமய்யா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

Next Story