கிருஷ்ணகிரியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்


கிருஷ்ணகிரியில் பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 24 May 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை, இயற்கை இடர்பாடுகளை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ராணுவ அதிகாரி தீபக் மண்டல் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்.

இதில் இயற்கை இடர்பாடுகளின் போது பேரிடர் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகள், அந்த பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நீர்வழித்தடங்கள், கழிவுநீர் கால்வாய்களை அகற்றி, நீர் தங்கு தடையின்றி செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டது.

புகார் தெரிவிக்கலாம்

கூட்டத்தில் பேரிடர் சூழ்நிலைகளில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு வருவாய் கோட்ட அளவில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04343- 234444 என்ற எண்களை தொடர்பு கொண்டு பொது மக்கள் பேரிடர், மழை வெள்ளம் குறித்த தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதில் வருவாய், ஊரகவளர்ச்சி, காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்வாரியம், பொதுப்பணித்துறை, மீன்வளம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story