காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை கூட்டணி ஆட்சிக்கு பங்கம் வராமல் செயல்படுமாறு அறிவுரை


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை கூட்டணி ஆட்சிக்கு பங்கம் வராமல் செயல்படுமாறு அறிவுரை
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கூட்டணி ஆட்சிக்கு பங்கம் வராமல் செயல்படுமாறு அறிவுரை கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கூட்டணி ஆட்சிக்கு பங்கம் வராமல் செயல்படுமாறு அறிவுரை கூறினார்.

வருமான வரி சோதனை

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நேற்று பதவி ஏற்றது. முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அகில காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று பெங்களூரு வந்தனர். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு, அவர்கள் தனியார் ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது சோனியா காந்தி பேசியதாவது:–

நீங்கள் எல்லாம் தேர்தலில் கடுமையான சவால்களை சந்தித்து வெற்றி பெற்று வந்துள்ளீர்கள். வருமான வரி சோதனை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு தாக்குதல்களை தைரியமாக எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதை நான் பாராட்டுகிறேன். உங்களை ஓட்டலில் தங்க வைத்து இருப்பதை கண்டு நான் வேதனை அடைகிறேன். ஆனால் அரசியல் நிலை மோசமாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கூட்டணி ஆட்சிக்கு பங்கம் வராமல்...

நீங்கள் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுங்கள். உங்களுக்கு உரிய நேரத்தில் கட்சி கவுரவத்தை வழங்கும். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எந்த பங்கமும் வராமல் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் பணியாற்றுங்கள். கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள். கட்சி மீதான உங்களின் விசுவாசத்தை நாங்கள் மறக்க மாட்டோம்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.


Next Story