மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து: நிதிநிறுவன அதிபர் உடல் நசுங்கி சாவு
தாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் நிதிநிறுவன அதிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
குண்டடம்,
தாராபுரம் ஆர்.கே.ஆர். நகரை சேர்ந்தவர் சிதம்பரசாமி (வயது 72). இவர் தாராபுரத்தில் நிதி நிறுவனம் வைத்து நடத்திவந்தார். இவர் தினமும் அதிகாலையில் எழுந்து, வட்டிப்பணம் வசூல் செய்ய செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று அதிகாலை வட்டிப்பணம் வசூல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சிதம்பரசாமி புறப்பட்டு சென்றார். தாராபுரம்-திருப்பூர் சாலையில் கோனாபுரம் அருகே அவர் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் சிதம்பரசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story