தனியார் நிறுவன வாடகை காரில் சென்ற வங்கி பெண் ஊழியரை மானபங்கம் செய்த டிரைவர் கைது
தனியார் நிறுவன வாடகை காரில் சென்ற வங்கி பெண் ஊழியரை மானபங்கம் செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
தனியார் நிறுவன வாடகை காரில் சென்ற வங்கி பெண் ஊழியரை மானபங்கம் செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெண் மானபங்கம்மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் வங்கி ஊழியரான 24 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று மாலை நரிமன்பாயிண்டில் இருந்து பவாய் பகுதிக்கு தனியார் நிறுவன வாடகை காரில் வந்தார். இதில், காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் அயர்ந்து தூங்கிவிட்டார்.
இந்தநிலையில் சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த அப்பெண், கார் டிரைவர் தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
டிரைவர் கைதுபின்னர் காரில் இருந்து இறங்கிய அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி பெண் ஊழியரை மானபங்கம் செய்த கார்கர் பகுதியை சேர்ந்த வாடகை கார் டிரைவர் சுரேஷ்குமார்(வயது36) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவர் இதுபோல வேறு எந்த பெண் பயணியையும் மானபங்கம் செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.