மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பாலியல் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது + "||" + 316877__பாலியல் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் ஏ

பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பாலியல் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது

பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் 
பாலியல் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது
பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் பாலியல் தொழிலாளியை கொலை செய்ததாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் பாலியல் தொழிலாளியை கொலை செய்ததாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் உடல் மீட்பு

மும்பை, கோவண்டி சிவாஜிநகர் பகுதியில் கடந்த 11-ந் தேதி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் பிளாஸ்டிக் பேரலில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் பிணம் ஒன்று மீட்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொலை செய்து உடலை பேரலில் வைத்து போட்டு சென்றவரை தேடினர். இதில், மினி வேனில் வந்த ஒருவர், பெண் உடல் இருந்த பேரலை அங்கு வைத்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வேன் டிரைவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

ரியல் எஸ்டேட் ஏஜெண்டு

அப்போது அவர், நெருல் பகுதியை சேர்ந்த பாபு பட்டேல் என்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டு ரூ.600 வாடகை கொடுத்து அந்த பேரலை சிவாஜி நகரில் இறக்கி வைக்க சொன்னதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் பாபு பட்டேலை கைது செய்தனர். விசாரணையில், அவர் தான் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணை கொலை செய்ததும், அந்த பெண் மும்பை தாதர் பகுதியை சேர்ந்த பாலியல் தொழிலாளி மீனா என்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கும், மீனாவிற்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டின் மனைவியையும் தேடிவருகின்றனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.