புகையிலை பொருட்கள் விற்பனையா? கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


புகையிலை பொருட்கள் விற்பனையா? கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 26 May 2018 10:15 PM GMT (Updated: 26 May 2018 7:10 PM GMT)

கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூ.3,400 அபராதம் வசூலிக்கப் பட்டது.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதி, ஆவணம் சாலை, சேது சாலை, பஸ் நிலையம், அறந்தாங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்தர்ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், கருப்பசாமி, தவமணி, புண்ணியநாதன், ராஜேந்திரன், பாலச்சந்திரன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பல கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தங்கள் கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.3,400 அபராதம் வசூலிக்கப் பட்டது.

Next Story