இந்த வேலைக்கு இவ்வளவு சம்பளமா..?
கோழிக் குஞ்சு ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் வேலையைச் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 38 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இங்கிலாந்தின் கோழிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிக் குஞ்சு ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் வேலையைச் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கிடைத்தாலும் இந்த வேலையைச் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வளர்ந்த பிறகு கோழியையும், சேவலையும் கண்டறிவது சுலபம். ஆனால் கோழிக் குஞ்சாக இருக்கும்போது கண்டறிவது கடினம். அனுபவம் வாய்ந்தவர்களாலேயே இந்த வேலையைச் செய்ய முடியும்.
அதிலும் ஒரு மணி நேரத்தில் 800 முதல் 1200 கோழிக் குஞ்சுகளை கையில் எடுத்து ஆணா, பெண்ணா என்று பரிசோதிக்க வேண்டுமாம். ஒரு கோழிக் குஞ்சைப் பரிசோதிக்க 3 நொடிகள் மட்டுமே கிடைக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுத்து அனுபவசாலிகளை பணியில் அமர்த்துகிறார்கள். அதிக சம்பளம் வழங்கப்பட்டாலும், இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே இல்லையாம்.
இங்கிலாந்து முழுவதும் 100 முதல் 150 பேர்தான் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள் என்றால் பாருங்களேன். கடந்த ஆண்டில் ஒருவர் கூட இது சார்ந்த படிப்பிலோ, புதிதாக வேலையிலோ சேரவில்லையாம். இங்கிலாந்தில் இந்த வேலைக்கு கடும் கிராக்கி நிலவிக்கொண்டிருக்க, தென்கொரியாவில் அபரிமிதமாக பெருகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கோழி குஞ்சுகளின் இனத்தை கண்டறியும் இந்த படிப்பினை முடித்து, பயிற்சிக்கு தயாராகி வருகிறார்களாம்.
Related Tags :
Next Story