"சூப்பர் ஸ்டாராக பார்த்து விட்டோம் தமிழக முதல்–அமைச்சராக பார்க்க ஆசை" துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் பேட்டி


சூப்பர் ஸ்டாராக பார்த்து விட்டோம் தமிழக முதல்–அமைச்சராக பார்க்க ஆசை துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் பேட்டி
x
தினத்தந்தி 30 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-30T19:30:42+05:30)

“சூப்பர் ஸ்டாராக பார்த்து விட்டோம். இனி தமிழக முதல்–அமைச்சராக பார்க்க ஆசையாக உள்ளது“ என்று துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி, 

“சூப்பர் ஸ்டாராக பார்த்து விட்டோம். இனி தமிழக முதல்–அமைச்சராக பார்க்க ஆசையாக உள்ளது“ என்று துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்தனர்.

நலம் விசாரித்தார்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.

அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போது அங்கு இருந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் ரஜினிகாந்த் காயம் அடைந்தவர்களை கட்டித்தழுவி உடல் நலம் குறித்து விசாரித்தார். சில பெண்கள், ரஜினிகாந்தை சந்தித்து நல்லா இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தனர்.

முதல்–அமைச்சராக வேண்டும்

அப்போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிலர் கூறுகையில், “தமிழகத்தை காக்க வந்த அவதாரமே வாருங்கள். தமிழகமே உங்கள் கையில்தான் இருக்கிறது. தமிழகத்தை காப்பாற்றுங்கள், தமிழ்நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது. நீங்கள் எப்போது முதல்–அமைச்சராகிறீர்களோ அன்றுதான் தமிழ்நாடு நன்றாக இருக்கும். உங்களை சூப்பர் ஸ்டாராக பார்த்து விட்டோம். இனி தமிழக முதல்–அமைச்சராக பார்க்க வேண்டும்.

தமிழக மக்கள் நன்றாக வாழ வேண்டும். அதற்கு ஒரே தலைவர், கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரரான இந்த தலைவரால்தான் முடியும். நீங்கள் முதல்–அமைச்சராக வேண்டும்“ என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இருந்தபோதிலும் காயம் அடைந்தவர்கள் சிலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ரஜினிகாந்திடம் அவர்கள் கூறுகையில் “நாங்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தினோம். அப்போது ஏன் நீங்கள் வரவில்லை“ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து மற்றொரு வார்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

ரஜினிகாந்த் கண்ணீர்

மேலும் காயம் அடைந்தவர்கள் கூறும் போது, “நடிகர் ரஜினிகாந்த் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? உங்களது உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் நலம் விசாரித்தனர். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. அதே நேரத்தில் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால், அவர் பாதிக்கப்பட்டவர்களுடன் அதிக நேரம் இருந்து பேச முடியவில்லை.


Next Story