குமரி மாவட்டத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் 9–வது நாளாக வேலை நிறுத்தம்


குமரி மாவட்டத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் 9–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:14 PM GMT)

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க குமரி கோட்டம் மற்றும் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க குமரி கோட்டம் மற்றும் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7–வது ஊதிய குழுவில் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திராகுழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்த கோரி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளவர்கள், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் வெவ்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 9–வது நாளான நேற்றும் போராட்டம் நீடித்தது. இதையொட்டி அனைத்து ஊழியர்களும் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க குமரி கோட்ட செயலாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சுகுமாரன், தேவ செல்வன், பிரசாந்த், ஐசக், வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

வேலை நிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் ஏராளமான கிராமப்புற தபால் நிலையங்களில் பணிகள் முடங்கி இருப்பதாகவும், பல கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story