ஆட்களை அனுப்பி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் சிறையில் இருந்த ரவுடியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை


ஆட்களை அனுப்பி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் சிறையில் இருந்த ரவுடியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 30 May 2018 7:56 PM GMT)

ஆட்களை அனுப்பி ஒருவரை கொல்ல முயன்ற வழக்கில் சிறையில் இருந்த ரவுடியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பாலியர்மேட்டை சேர்ந்தவர் திரு என்கிற திருநாவுக்கரசு, இவர் கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொல்ல முயன்றது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து, பிரபாகரன் உள்பட 3 பேரை கைது செய்தார்.

காஞ்சீபுரம் ரவுடி தியாகராஜன் சொல்லிதான் திருநாவுக்கரசை கொலை செய்ய சென்றோம் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அதையொட்டி, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி தியாகு என்கிற தியாகராஜனை போலீஸ் காவலில் எடுத்து, ஒரு நாள் முழுவதும் துருவி துருவி விசாரணை நடத்தினார். விசாரணையில், ’ ரவுடி திரு என்கிற திருநாவுக்கரசை கொலை செய்ய ஆட்களை அனுப்பியதை ஒத்துக்கொண்டார். தங்களுக்குள் பகை இருந்ததால் திருநாவுக்கரசை கொலை செய்ய ஆட்களை அனுப்பியதாக, தியாகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதையொட்டி, ரவுடி தியாகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story