அந்தேரியில் ரூ.20 லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது


அந்தேரியில் ரூ.20 லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 May 2018 9:45 PM GMT (Updated: 2018-05-31T03:15:39+05:30)

அந்தேரியில் ரூ.20 லட்சம் போதைப்பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை அந்தேரி அம்போலி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சந்தேக படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.

இதில் அவரிடம் இருந்த 5 கிலோ எடை கொண்ட எபட்ரின் என்ற போதைப்பொருள் சிக்கியது. போலீசார் அதை அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் முகமது நதீம் சாபிக்கான் (வயது26) என்பது தெரியவந்தது. அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார்? யாரிடம் கொடுப்பதற்காக சுற்றி கொண்டிருந்தார்? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story