பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட உச்சம்பாறை, ஆண்டிதோப்பு பகுதிகளில் கடந்த பல நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதற்காக குடங்களுடன் அங்கும் இங்குமாக அலைந்து அவதியடைந்தனர்.
இந்தநிலையில், நேற்று காலையில் உச்சம்பாறை, ஆண்டிதோப்பு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலி குடங்களுடன் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன் கூடினர். அப்போது, குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு பூதப்பாண்டி மண்டல பா.ஜனதா தலைவர் விஜய் மணியன் தலைமை தாங்கினார். ஈசை கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் மணி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிதண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story