ஆஸ்திரேலிய இளம்பெண்ணிடம் கத்திமுனையில் வழிப்பறி


ஆஸ்திரேலிய இளம்பெண்ணிடம் கத்திமுனையில் வழிப்பறி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:00 AM IST (Updated: 1 Jun 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி கேமராக்கள் மற்றும் கைப்பையை மர்மநபர் பறித்துச்சென்றார்.

அடையாறு,

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் எலீசா (வயது 25). சென்னைக்கு சுற்றுலா வந்த அவர், மெரினா கடற்கரை சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் அமர்ந்து நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி எலீசாவிடம் இருந்த 2 கேமரா மற்றும் கைப்பையை பறித்துச்சென்று விட்டார்.

அந்த கைப்பையில் ரூ.15 ஆயிரம், கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story