ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் துவரங்குறிச்சியில் தம்பிதுரை பேட்டி


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் துவரங்குறிச்சியில் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் என்று துவரங்குறிச்சியில் மு.தம்பிதுரை கூறினார்.

துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங் குறிச்சி அருகே உள்ள பழைய பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறிய தாவது:-

தூத்துக்குடி சம்பவத்தில் விஷமிருகள் ஊடுருவியதாக ரஜினி கூறியிருப்பது அவரது கருத்து. அதற்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அ.தி.மு.க அரசு மூட உத்தரவிட்டிருக்கிறது. இந்த அரசு எக்காரணத்தை கொண்டும் இனி ஆலையை திறக்க விடாது. ஆலை நிர்வாகத்தின் சார்பில் உச்சநீதிமன்றம் சென்றாலும் அங்கும் சட்டவல்லுனர்களை கொண்டு வாதாடி ஆலையை திறக்க விடாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

தமிழகத்தை பொறுத்தவரை திராவிடம் என்ற சொல் இல்லாத எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை. திராவிடத்தின் பரிணாம வளர்ச்சி கொண்ட அ.தி.மு.க.வையோ, இந்த ஆட்சியையோ ஒரு போதும் வீழ்த்த முடியாது. தொடர்ந்து இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது டி.ரத்தினவேல் எம்.பி., மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

Next Story