கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, முத்ரா கடன் உதவி திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றால் பணிச்சுமை அதிகரித்துள்ளதால், வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களை பாதிக்கும் சேவை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
பெரிய நிறுவனங்களின் வராக்கடனை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு உள்பட 9 தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி வேலை நிறுத்தம் கடந்த 30-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்பகோணத்தில் உள்ள 61 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கும்பகோணத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டதால் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story