தவுட்டுப்பாளையத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
தவுட்டுப்பாளையத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் புகளூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் 24 மணி நேரமும் அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவுட்டுப்பாளையம்- பாலத்துறை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவுட்டுப்பாளையம் பயணிகள் நிழற்குடையின் பின்புறம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேறி வீணாகிறது.
குடிநீர் பற்றாக்குறை
கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில் குடிநீர் தேவையற்ற முறையில் வீணாகிவருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story