4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்
4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவர். இவர், கடந்த 2016-ம் ஆண்டில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்து, வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீாப்பு கூறப்பட்டிருந்தது. மேலும் தண்டனைகளை நாகராஜன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் பலத்த காவலுடன் நாகராஜனை அழைத்து சென்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Related Tags :
Next Story