வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 2 நாட்களில் ரூ.450 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்களில் ரூ.450 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
சேலம்,
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. இதை ஏற்க ஊழியர்கள் சங்கங்கள் மறுத்துவிட்டன. ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்காவிட்டால் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன. இதன்படி நேற்று முன்தினம் முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர, மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். பல வங்கிகள் மூடப்பட்டதால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று முன்தினம் ரூ.300 கோடி வரை பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டையில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் கூறுகையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். கடந்த 2 நாட்களில் சேலம் மாவட்டத்தில் ரூ.450 கோடி வரை பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.
2 நாட்களாக நடந்த வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகளில் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்பட அனைத்து வங்கி பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Related Tags :
Next Story