அரூர் அருகே நடந்த வாரசந்தையில் ரூ.42 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் சந்தை நடைபெற்று வருகிறது.
அரூர்,
அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்குவதற்காக வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.42 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாடு ரூ.25,000 முதல் ரூ. 43,500 வரை விலை போனது. ஆடு ஒன்று ரூ.2,850 முதல் ரூ.7,350 வரை விற்பனையானது. கோழிகள் எடைக்கு தகுந்தாற்போல் விலை போனது. இதனை வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கி சென்றனர். வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்து போட்டி போட்டு வாங்கியதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகள் அதிக விலைக்கு விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story