மத்திய அரசின் செயலியில் புதுச்சேரி இணைய வேண்டும்- கிரண்பெடி


மத்திய அரசின் செயலியில் புதுச்சேரி இணைய வேண்டும்- கிரண்பெடி
x
தினத்தந்தி 1 Jun 2018 5:15 AM IST (Updated: 1 Jun 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் செயலியில் புதுச்சேரி இணைய வேண்டும் கிரண்பெடியிடம், பா.ஜனதா வலியுறுத்தினா்.

புதுச்சேரி

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், மணவெளி தொகுதி பொதுச் செயலாளர்கள் கலைவாணன், சுகுமாரன் ஆகியோர் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அரசு சேவைகளை ஒரே தளத்தில் மிக எளிமையாக பயன்படுத்தி தெரிந்துகொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு ‘உமாங்’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த செயலியில் ஆதார், மின்சாரம், தண்ணீர், தொலைபேசி, டி.டி.எச். உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த முடியும். குறிப்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்கள், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அரசு துறைகளின் சேவைகள் மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

புதுச்சேரி மாநிலமும் மத்திய அரசின் இந்த ‘உமாங்’ செயலியில் இணைவதற்கு நமது தகவல் தொழில்நுட்பத்துறை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து செயலாற்ற உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இந்த செயலியில் புதுச்சேரி மாநிலம் இணைந்தால் 11 துறைகளை சேர்ந்த 72 சேவைகளை பொதுமக்கள் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story