கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன்சிலை திருடப்பட்டது. உண்டியலையும் மர்மநபர்கள் பெயர்த்து சென்று விட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தில் ஆதி அக்னீஸ்வரர் கோவில் உள்ளத. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அர்ச்சகர் ராமமூர்த்தி பூஜை செய்து விட்டு மதியம் 12 மணிக்கு கோவிலை சாத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். அவர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்ப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பாத்த போது பிரதோஷ உற்சவர் எனப்படும் 2 அடி உயரம் உள்ள சிவன், பார்வதி ஐம்பொன் சிலை, 32 வகையான தீபாராதனை தட்டுகள், 4 பித்தளை குத்து விளக்குகள், பித்தளை குடம், எண்ணெய் டின், மற்றும் செம்பால் ஆன நாகாபரணம் கெள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு இருந்த உண்டியல் மர்ம நபர்களால் பெயர்த்து எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி கோவிந்தராஜ் பென்னாலூர்பேட்டைபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேலும் திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை சேகரித்தனர்.

Related Tags :
Next Story