பாக்கெட்டில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க அடித்து கொன்றேன்
செங்கல் சூளை அதிபர் கொலையில் திடீர் திருப்பமாக அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக அடித்து கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அணைக்கட்டு,
பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 60). செங்கல் சூளை அதிபர். இவர், கடந்த 28-ந் தேதி தனது தென்னந்தோப்பில் உள்ள பம்புசெட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்தார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் செங்கல் சூளை அதிபரை கொலை செய்தது வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தா என்கிற முத்துகுமார் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது.
நான் சிறிய வயதிலேயே திருட்டில் ஈடுபட்டு வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோரை இழந்தேன். ஆதரவு இல்லாமல் தவித்தேன். கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தினேன். வேலையில்லாத போது தென்னந்தோப்பில் தேங்காய் திருடுவது போன்ற திருட்டில் ஈடுபட்டு வந்தேன்.
செங்கல் சூளை அதிபரான காசிநாதனின் தென்னந்தோப்பில் தேங்காய் திருடியபோது கையும், களவுமாக சிக்கிக்கொண்டேன். அதனால் அவர் என்னை தாக்கினார். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் இருந்தது. அவரை சரியான நேரம் பார்த்து பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்தேன். காசிநாதன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருவது வழக்கம். அதனால் அவருடைய டவுசர் பாக்கெட்டில் அதிக அளவில் பணம் வைத்திருப்பார்.
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி பகல் 12 மணிக்கு காசிநாதன் தென்னந்தோப்பிற்கு செல்வதை பார்த்தேன். அவரிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ½ மணி நேரம் கழித்து பின் தொடர்ந்தேன். பம்பு செட் அறையில் துாங்கிக் கொண்டு இருந்த காசிநாதனின் டவுசர் பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தை எடுக்க முயன்றேன். அப்போது அவர் விழித்துக்கொண்டார். இதனால் நான் சிக்கிக் கொண்டேன். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டோம்.
இதையடுத்த நான் அறையில் இருந்த இரும்பு ராடை எடுத்து காசிநாதன் பின்பக்க தலையிலும், முகத்திலும் தாக்கினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து காசிநாதனின் டவுசர் பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு பெங்களூருவுக்கு தப்பி சென்றுவிட்டேன்.
பெங்களூருவில் இருந்த நான் வெட்டுவாணத்தில் உள்ள உறவினர் சிலரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது காசிநாதனை கொன்றதாக அவர்களிடம் கூறினேன். உறவினர்கள் உடனடியாக போலீசாரிடம் சரணடையுமாறு கூறினார்கள்.
இதையடுத்து போலீசில் சரணடைவதற்காக நேற்று முன்தினம் வெட்டுவாணத்திற்கு பஸ்சில் வந்தேன். பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கிய என்னை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு முத்துகுமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story