ஆடம்பர காரை அலங்கரிக்கும் பொம்மை கார்கள்...!


ஆடம்பர காரை அலங்கரிக்கும் பொம்மை கார்கள்...!
x
தினத்தந்தி 2 Jun 2018 4:00 AM IST (Updated: 1 Jun 2018 3:15 PM IST)
t-max-icont-min-icon

மலேசியா தொழிலதிபர் தன்னுடைய விலை மதிப்புமிக்க காரின் மேல் பொம்மை கார்களை ஒட்டியுள்ளார்.

லேசியாவைச் சேர்ந்த 34 வயது மஹாடி பட்ருல் ஜமான் தொழிலதிபராக இருக்கிறார். 13 வயதிலிருந்தே இவருக்கு பொம்மை கார்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. படித்து, தொழிலதிபராகி, சொந்தமாக ஆடம்பர கார் வாங்கியபோதும் பொம்மை கார் மீதுள்ள ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. 5 ஆயிரம் பொம்மை கார்களை என்ன செய்வது என்று யோசித்தவர், தன்னுடைய விலை மதிப்புமிக்க ஜாக்குவார் காரின் மேல் ஒட்டி விட்டார்.

சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கறுப்பு என்று பல வண்ணங்களில் 4,600 பொம்மை கார்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. கண்ணாடி, விளக்குகள், சக்கரங்களைத் தவிர எல்லா இடங்களிலும் பொம்மை கார்கள் இருக்கின்றன.

‘‘பொம்மை கார்களை ஒட்டியதால் இரண்டு பிரச்சினைகள் தீர்ந்தன. இத்தனை பொம்மை கார்களை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. பொம்மை கார்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைவேறியது. இதில் மிக முக்கியமான விஷயம், நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவும் தெரிகிறேன். எங்காவது காரை நிறுத்திவிட்டுச் சென்றால், பொம்மை கார்களை யாராவது பிய்த்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்று பயம் மட்டுமே இருக்கிறது” என்கிறார் மஹாடி ஜமான். 

Next Story