அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 2 Jun 2018 3:15 AM IST (Updated: 1 Jun 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கர்த்திக் (வயது 38). இவரது மனைவி பார்வதி. இவர் வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது வீடு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர்.அப்போது கார்த்திக் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அதே பகுதியில் குடியிருக்கும் கார்த்திக்கின் மாமாவுக்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததும் தெரியவந்தது. இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக வந்த போலீசார் இறந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story